Recent Post

6/recent/ticker-posts

செகந்தராபாத் பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரியின் கமாண்டன்டாக மேஜர் ஜெனரல் ஹர்ஷ் சிப்பர் பொறுப்பேற்பு / Major General Harsh Chipper assumed charge as Commandant of Defense Management College, Secunderabad

செகந்தராபாத் பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரியின் கமாண்டன்டாக மேஜர் ஜெனரல் ஹர்ஷ் சிப்பர் பொறுப்பேற்பு / Major General Harsh Chipper assumed charge as Commandant of Defense Management College, Secunderabad

மேஜர் ஜெனரல் ஹர்ஷ் சிப்பர், மே 31, 2024 அன்று ரியர் அட்மிரல் சஞ்சய் தத்திடமிருந்து செகந்தராபாத் பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரியின் கமாண்டன்டாக பொறுப்பேற்றார்.

தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான மேஜர் ஜெனரல் ஹர்ஷ் சிப்பர், 1988 டிசம்பரில் ராணுவ சேவை படையில் நியமிக்கப்பட்டார்.

மேஜர் ஜெனரல் ஹர்ஷ் சிப்பர் வணிக மேலாண்மை மற்றும் பொது நிர்வாகத்தில் இரண்டு ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டங்களுடன் பொதுக் கொள்கையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

தொழில்நுட்ப பதவிநிலை அதிகாரிகள் பாடப்பிரிவு, உயர் பாதுகாப்பு மேலாண்மை பாடப்பிரிவு மற்றும் பொது நிர்வாகத்தில் மேம்பட்ட தொழில்சார் திட்டம் ஆகியவற்றையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் சிப்பரின் ராணுவ அனுபவம் கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு துறைகளில் பாரா ஏ.எஸ்.சி பிரிவு, ஏ.எஸ்.சி படை மற்றும் ஏ.எஸ்.சி பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளை உள்ளடக்கியது.

அவர் கிழக்குத் துறையில் பிரிகேடியர் ஜெனரல் ஸ்டாஃப் (தகவல் அமைப்பு) மற்றும் வடக்கு துறையில் மேஜர் ஜெனரல் (செயல்பாட்டு தளவாடங்கள்) ஆக இருந்துள்ளார்.

ராணுவ சேவை படை மையம் மற்றும் கல்லூரியில் பயிற்றுவிப்பாளராகவும், பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரியில் வழிகாட்டும் பணியாளர் மற்றும் நிதி மேலாண்மைத் துறையின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

இவரால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட மென்பொருள் செயலிகள் ஏராளமான பிரிவுகளில் பயன்பாட்டில் உள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel