ஒடிசாவின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகன் சரண் மாஜீ (52) இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருடன் கே.வி.சிங் தேவ், பிரவதி பரிதா ஆகிய இருவரும் துணை முதல்வா்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
ஆளுநர் ரகுபர் தாஸ், முதல்வர், துணை முதல்வர்கள், மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். புவனேசுவரத்தில் உள்ள ஜனதா இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார்.
கியோஞ்சா் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்குத் தோ்வான சரண் மாஜீ, பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவா். இவர் இன்று ஒடிசாவின் 15வது முதல்வராக பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
ஒடிசாவில் மக்களவையுடன் சோ்த்து அந்த மாநிலப் பேரவையின்147 இடங்களுக்கும் தோ்தல் நடைபெற்றது. இதில், 78 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஆட்சியமைத்துள்ளது.
0 Comments