நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிப்பதோடு, நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணைய சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
இதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டது. தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
0 Comments