முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி(எஸ்கேஎம்) 32 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 31 இடங்களை வென்று வரலாறு படைத்து மலைப்பிரதேசமான சிக்கிமில் இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
மற்றொரு புறம் இந்தியாவின் நீண்ட காலம் முதல்வராக இருந்தவரும், சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎஃப்) கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான பவன் குமார் சாம்லிங் அவர் போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளார்.
சிக்கிம் ஜனநாயக முன்னணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஷியாரி தொகுதியில் போட்டியிட்ட டென்சிங் நோர்பு லாம்தா மட்டும் ஒரேயொரு இடத்தில் வெற்றி பெற்றார்.
0 Comments