பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (19.06.2024) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான இந்திய விமான நிலைய ஆணையத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறனை ஆண்டுக்கு 39 லட்சத்திலிருந்து 99 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செலவு ரூ.2869.65 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
75,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட புதிய முனையக் கட்டடம் ஒரே நேரத்தில் 5000 பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் ஓடுபாதையை நீட்டிப்பது உள்ளிட்ட பணிகளும் அடங்கும். சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்யும் முதன்மை நோக்கத்துடன் வாரணாசி விமான நிலையம் பசுமை விமான நிலையமாக உருவாக்கப்படும்.
0 Comments