பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை, கடற்கரைக்கு அப்பால் காற்றாலை எரிசக்தித் திட்டங்களை அமல்படுத்துவதில் சாத்தியக்கூறு இடைவெளி நிதியளிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டிலும், குஜராத்திலும் தலா 500 மெகா வாட் என மொத்தம் ஒரு ஜிகா வாட் மின்னுற்பத்திக்கு கடற்கரைக்கு அப்பால், காற்றாலை எரிசக்தித் திட்டங்களை நிறுவுதல், மற்றும் இயக்குதலுக்கான ரூ. 6853 கோடி உட்பட இவற்றுக்கான மொத்த ஒதுக்கீடு ரூ. 7453 கோடியாகும்.
இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் போது, ஆண்டுக்கு 372 கோடி யூனிட் புதுப்பிக்க வல்ல மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதனால் அடுத்த 25 ஆண்டுகளில் ஆண்டுக்கு 2.98 மில்லியன் டன் கரியமிலவாயு வெளியேற்றம் குறைக்கப்படும்.
0 Comments