துருக்கியின் அன்டாலியா நகரில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவு இறுதி சற்றில் ஜோதி சுரேகா, அதிதி சுவாமி, பர்னீத் கவுர் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி, எஸ்டோனியா அணியை எதிர்த்து விளையாடியது.
இதில் இந்திய மகளிர் அணி 232-229 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும், மே மாதம் கொரியாவின் யெச்சியோன் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றிருந்தது.
0 Comments