2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை இந்தியாவில் சாலை விபத்துகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் / Road accident fatalities in India from 2018 to 2022
TAMIL
நாட்டில் 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைகள் குறித்து விவரங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறை அளித்துள்ளது.
2018-ம் ஆண்டில் 1,57,593 பேரும், 2019-ம் ஆண்டில் 1,58,984 பேரும், 2020-ம் ஆண்டில் 1,38,383 பேரும், 2021-ம் ஆண்டில் 1,53,972 பேரும், 2022-ம் ஆண்டில் 1,68,491 பேரும் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.
2022-ம் ஆண்டில் போக்குவரத்து விதிகளை மீறியதால், உயிரிழந்தவர்களின் விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வாகனங்களை அதிக வேகத்தில் இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் 1,19,904 பேர் உயிரிழந்தனர்.
ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் 4,201 பேரும், தவறான பாதைகளில் சென்றதால் ஏற்பட்ட விபத்தில் 9,094 பேரும், சிவப்பு விளக்கு எல்லையைத் தாண்டியதால் ஏற்பட்ட விபத்தில் 1,462 பேரும், மொபைல் போன் பேசிக்கொண்டே சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 3,395 பேரும், மற்ற காரணங்களால் 30,435 பேரும் உயிரிழந்தனர்.
ENGLISH
State and Union Territories police have provided details of the number of road accident deaths in the country from 2018 to 2022. 1,57,593 people died in 2018, 1,58,984 in 2019, 1,38,383 in 2020, 1,53,972 in 2021 and 1,68,491 in 2022.
The details of those who died due to violation of traffic rules in 2022 have also been given. Accordingly, 1,19,904 people died in accidents due to driving vehicles at high speed.
4,201 people died in accidents due to driving under the influence of alcohol and drugs, 9,094 in accidents due to driving on wrong lanes, 1,462 in accidents due to crossing the red light limit, 3,395 in accidents while talking on mobile phones, and 30,435 due to other causes.
0 Comments