Recent Post

6/recent/ticker-posts

வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது மற்றும் பூம்புகார் மாநில விருது 2022 - 2023 / VAAZHUM KAIVINAI POKKISAM VIRUTHU & POOMBUKAR MANILA VIRUTHU 2022 - 2023

வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது மற்றும் பூம்புகார் மாநில விருது 2022 - 2023
VAAZHUM KAIVINAI POKKISAM VIRUTHU & POOMBUKAR MANILA VIRUTHU 2022 - 2023

வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது மற்றும் பூம்புகார் மாநில விருது 2022 - 2023 / VAAZHUM KAIVINAI POKKISAM VIRUTHU & POOMBUKAR MANILA VIRUTHU 2022 - 2023

TAMIL

வாழும் கைவினைப் பொக்கிஷம் விருது மற்றும் பூம்புகார் மாநில விருது 2022 - 2023 / VAAZHUM KAIVINAI POKKISAM VIRUTHU & POOMBUKAR MANILA VIRUTHU 2022 - 2023: கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான 'வாழும் கைவினைப் பொக்கிஷம்' விருதுகளை, பித்தளை கலைப் பொருட்கள் பிரிவில் காஞ்சிபுரம் ந.பாலகிருஷ்ணன் மற்றும் தஞ்சாவூர் கே.பி. உமாபதி, சுடு களிமண் பிரிவில் திருநெல்வேலி சா.ராஜகோபால், கற்சிற்பம் பிரிவில் திருவண்ணாமலை ந.மணி ஆச்சாரி, கோவில் நகைகள் பிரிவில் கன்னியாகுமரி சி.முத்துசுவாமி ஆச்சாரி, இசைக்கருவி பிரிவில் தஞ்சாவூர் சு.கோவிந்தராஜ், கோரைப்பாய் நெசவு பிரிவில் திருநெல்வேலி ப.சுலைகாள் பீவி, இயற்கை நார் பொருட்கள்பிரிவில் கன்னியாகுமரி செ.தங்க ஜோதி ஆகிய 8 பேருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருதாளர்களுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

அதேபோல், 2022-23-ம் ஆண்டுக்கான பூம்புகார் மாநில விருதுகளானது, தஞ்சாவூர் ஓவியம் பிரிவில் தஞ்சாவூரைச் சேர்ந்த சி.ரவி, ச.நாகலெட்சுமி, புதுக்கோட்டையைச் சேர்ந்த மா.ராஜப்பா ஆகியோருக்கும், இசைக்கருவி பிரிவில் தஞ்சாவூர் ம.முருகேசன், தஞ்சாவூர் கலைத்தட்டு பிரிவில் ரா.லோகநாதன், சித்திரத்தையல் பிரிவில் கன்னியாகுமரி ந.பூவம்மாள், கற்சிற்பம் பிரிவில் செங்கல்பட்டு ப.வரதன், மு.ராஜரத்தினம், மரச்சிற்பம் பிரிவில் கள்ளக்குறிச்சி ரா.சக்திவேல், மூங்கில்பாய் ஓவியம் பிரிவில் கன்னியாகுமரி செ.லில்லி மேரி ஆகிய 10 விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
விருதாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

ENGLISH

VAAZHUM KAIVINAI POKKISAM VIRUTHU & POOMBUKAR MANILA VIRUTHU 2022 - 2023: The 'Vaazhum Kaivinai Pokkisham' awards for the year 2022-23 were won by Kanchipuram N.Balakrishnan and Thanjavur K.P. Umapati, Tirunelveli S.Rajagopal in fired clay category, Thiruvannamalai N.Mani Achari in stone sculpture category, Kanyakumari C.Muthuswamy Achari in temple jewelry category, Thanjavur S.Govindaraj in musical instrument category, Tirunelveli P.Sulaikal Bivi in ​​hoof weaving category, Kanyakumari Sethanga in natural fiber category. Chief Minister M. K. Stalin gave the torch to all the 8 people. The awardees were presented with a check of Rs.1 lakh each, an 8 gram gold medal, a copper bond and a certificate. 

Likewise, the Poombukar Manila Awards for the year 2022-23 will be given to Thanjavur C.Ravi, S.Nagaletsumi from Thanjavur and Pudukottai's M.Murugesan in Thanjavur painting category, Thanjavur M. Murugesan in Thanjavur art category, Thanjavur Ra.Loganathan in painting category. Chief Minister M.K.Stalin presented 10 awards to Phuvammal, Stone sculpture category Sengalpattu P.Varathan, Mu.Rajaratnam, Kallakurichi Ra.Sakthivel in wood sculpture category, Kanyakumari S.Lilly Mary in bamboo painting category. The awardees were presented with a check of Rs.50 thousand each, a 4 gm gold medal, a copper bond and certificates.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel