பொருளாதார ஆய்வறிக்கை 2023 - 2024
ECONOMIC SURVEY FOR YEAR OF 2023 - 2024
TAMIL
2023-24 ஆம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை / ECONOMIC SURVEY FOR YEAR OF 2023 - 2024: நாடாளுமன்ற மழைக்கால மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-24-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.
முக்கிய அம்சங்கள்
2023-24 ஆம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை / ECONOMIC SURVEY FOR YEAR OF 2023 - 2024: 2024-25 நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 6.5% முதல் 7% வளர்ச்சி அடையும் எதிர்பார்க்கப்படுகிறது.
2023-24 நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.2% வளர்ச்சி அடைந்துள்ளது.
தொழில் துறையின் வளர்ச்சி 9.5 சதவீதமாக உள்ளது.
தொழில் துறை வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் 5.2 சதவீத சராசரி வளர்ச்சி விகிதத்துடன் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.
தொழில் துறையின் நிகர மதிப்பு 2023 ஆம் நிதியாண்டில் 13.4%; அதே காலகட்டத்தில் உற்பத்தியின் பங்களிப்பு 35.2%
2023-24 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4%; முந்தைய 6.7%.
உணவுப் பணவீக்கம் 6.6%-ல் இருந்து 7.5% ஆக உயர்ந்துள்ளது.
2023-24 நிதி ஆண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஜி.டி.பியில் 0.7% இருந்துள்ளது. 2022-23 நிதியாண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஜி.டி.பியில் 2% இருந்தது.
வெளிநாடு இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணம் 124 பில்லியன் டாலராகவும், 2025-ல் 129 பில்லியன் டாலராகவும் இருக்கும்.
நாட்டின் 47.5% மொத்த உற்பத்தி மதிப்பில் பெரும்பாலான மூலப்பொருட்கள் உள்நாட்டிலிருந்தே பயன்படுத்தப்பட்டன
விவசாயம், தொழில், சேவை துறைகளில் அனைத்து உற்பத்தி சார் நடவடிக்கைகளிலும் 50% உள்நாட்டு பொருட்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.
1960 ஆம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறையால் உணவுப் பொருளை இறக்குமதி செய்யும் நாடாக இருந்த இந்தியா தற்போது வேளாண் விளை பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது.
உணவு பாதுகாப்பு என்ற அடிப்படை நிலையிலிருந்து ஊட்டச்சத்து பாதுகாப்பு என்ற நிலைக்கு முன்னேற்றம் பெற வேண்டிய தருணம் இது.
அடிப்படை உணவு தேவையை காட்டிலும் பருப்பு வகைகள், சிறுதானியங்கள், பழ வகைகள், காய்கறிகள், பால், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது.
உணவுப் பொருள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வேளாண் துறைக்கான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.
இயற்கை ஆதாரங்களுடன் கூடிய ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் புதிய வேளாண் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.
விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டு வேளாண் விளைப் பொருட்களுக்கான சந்தை செயல்பாடுகளை உறுதி செய்யும் வகையில் 5 அம்ச கொள்கைகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பு ரீதியான முன்னேற்றம் காரணமாக அண்மை ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது.
2018 முதல் 2024 வரையிலான நிதியாண்டில், சமூக நலத்திட்டங்களுக்கான செலவு, ஆண்டின் மொத்த வளர்ச்சி வீதத்தில் 12.8% அளவிற்கு அதிகரித்துள்ளது.
6 ஆண்டுகளில் சுகாதாரத்திட்டங்களுக்கான செலவு 15.8% அதிகரித்துள்ளது.
சமூகப் பணிகளுக்கான செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.8% அதிகரித்துள்ளது.
சுகாதாரத் துறைக்கான செலவு 2017-18-ல் ரூ2.43 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2023-24-ல் 5.85 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
சமூகப் பணிகளுக்கான செலவு ரூ.23.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
தேசிய சுகாதார கணக்குகள் மதிப்பீட்டின்படி, கடந்த சில ஆண்டுகளில் மருத்துவ சிகிச்சை என்பது செலவு குறைந்ததாகவும், பொது மக்கள் அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாகவும் மாறியுள்ளது.
அரசின் சுகாதார செலவினங்களில், தொடக்கநிலை சுகாதார சேவைகளுக்கான செலவு 55.9% அதிகரித்துள்ளது.
2020-ம் ஆண்டு கணக்கின்படி, பச்சிளங் குழந்தைகள் இறப்பு விகிதமும், பேறுகால இறப்பு விகிதமும் பெருமளவு குறைந்துள்ளது.
நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் பாதிப்பு நிலவரத்தைக் கட்டுப்படுத்தவும் ஏதுவாக, ஆரோக்கியமான உணவுகளை உண்பதற்கும், மனநல ஆரோக்கியத்தைப் பேணவும், அரசும், பொது மக்களும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இந்தியாவின் மின் பகிர்மானம், ஒரே அலைவரிசையுடன், மாநிலங்களுக்கிடையே மாற்றம் செய்து கொள்ளத்தக்கவகையில் 1,18,740 மெகாவாட் திறனுடன் ஒரே தொகுப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இது, உலகிலேயே மிகப்பெரிய மின்தொகுப்பாக உருவெடுத்துள்ளது.
2024 மார்ச் 31 வரை, மின் பகிர்மான திட்டங்கள், 4,85,544 சர்க்கியூட் கிலோமீட்டர் அளவுக்கு மின்பகிர்மான வழித்தடங்கள் விரிவுபடுத்தப்பட்டு, 12,51,080 மெகா வோல்ட் ஆம்ப் (எம்விஏ) மின்பகிர்மான திறன் கொண்டதாக உள்ளது.
2017 அக்டோபரில் சௌபாக்யா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 2.86 கோடி வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பயன்பாட்டில், புதைபடிமம் அல்லாத எரிபொருளின் பங்களிப்பை அதிகரிக்கத் தேவையான முயற்சிகளை நாடு விரைவுபடுத்தியுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை 2024-2030-க்குள் ரூ.30.5 லட்சம் கோடி முதலீட்டை இந்தியா ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருவநிலை மாற்றத்திற்கான ஐநா மாநாட்டில், 2030-க்குள் இந்தியாவின் மின்சார உற்பத்தியில் புதைமடிமம் அல்லாத எரிபொருள் பயன்பாட்டை 50 சதவீதம் என்ற அளவுக்கு அடைய இந்தியா உறுதியளித்துள்ளது. அதன்படி, புதைபடிமம் அல்லாத எரிபொருட்களைப் பயன்படுத்தி இந்தியாவின் நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனை 2030-க்குள் 500 ஜிகா வாட் என்ற அளவுக்கு உயர்த்த மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறை குறித்த ஆய்வில் வளரும் நாடுகள் அது தொடர்பான பிரச்சனைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.
ENGLISH
ECONOMIC SURVEY FOR YEAR OF 2023 - 2024: Monsoon and Budget session of Parliament started today. Union Finance Minister Nirmala Sitharaman presented the Economic Survey for the year 2023-24 in the Lok Sabha.
Key features
ECONOMIC SURVEY FOR YEAR OF 2023 - 2024: The Indian economy is expected to grow by 6.5% to 7% in FY 2024-25.
Indian economy is projected to grow at 8.2% in FY 2023-24.
The growth of industrial sector is 9.5 percent.
Industrial sector growth has led manufacturing with an average growth rate of 5.2 percent over the last 10 years.
Industry sector net worth 13.4% in FY2023; The contribution of manufacturing during the same period was 35.2%.
Retail Inflation 5.4% in FY 2023-24; Previous 6.7%.
Food inflation rose to 7.5% from 6.6%.
The current account deficit is projected to be 0.7% of GDP in FY 2023-24. The current account deficit is projected to be 2% of GDP in FY 2022-23.
Overseas Indian remittances to India will be $124 billion and will reach $129 billion by 2025.
47.5% of the country's total production value, most of the raw materials were used domestically.
50% of all production activities in agriculture, industry and service sectors are used domestically.
In 1960, India was a food importer due to food shortages and has now emerged as an exporter of agricultural products.
Now is the time to progress from basic food security to nutritional security.
The demand for food items including pulses, small grains, fruits, vegetables, milk and meat is increasing more than the basic food requirement.
Policies should be formulated for the agriculture sector to meet the food demand.
New agricultural policies should be developed to promote the production of nutritious food products with natural sources.
The central government has recommended 5-point policies to ensure market functioning for agricultural produce considering the interests of the farmers.
India's economic growth has been increasing in recent years due to systemic progress that is driving social change.
In the fiscal year 2018 to 2024, spending on social welfare programs has increased at a compound annual growth rate of 12.8%.
Expenditure on health schemes has increased by 15.8% in 6 years.
Expenditure on social services increased by 7.8% of GDP.
The expenditure on health sector has increased from Rs 2.43 lakh crore in 2017-18 to Rs 5.85 lakh crore in 2023-24.
The expenditure on social works has increased to Rs 23.5 lakh crore.
As the National Health Accounts estimate, medical care has become more affordable and accessible to the general population in the last few years.
Out of government health expenditure, expenditure on primary health services has increased by 55.9%.
According to the 2020 census, the infant mortality rate and perinatal mortality rate have decreased significantly.
In order to improve the health of the people of the country and control the incidence of diseases, the government and the general public should give importance to eating healthy foods and maintaining mental health.
India's power distribution is integrated into a single bundle with a capacity of 1,18,740 MW, inter-state transferable with single bandwidth. It has emerged as the largest power bank in the world.
As of March 31, 2024, power distribution projects have expanded 4,85,544 circuit kilometers of power distribution lines with a power distribution capacity of 12,51,080 mega volt amps (MVA).
Since the launch of Chaubhagya scheme in October 2017, 2.86 crore households have been provided electricity connection.
In fuel consumption, the country has accelerated the necessary efforts to increase the contribution of non-fossil fuels.
India is expected to attract an investment of Rs 30.5 lakh crore in the renewable energy sector by 2024-2030.
At the UN Climate Change Conference, India has committed to achieving 50 percent non-fossil fuel use of India's electricity generation by 2030.
Accordingly, the Ministry of New and Renewable Energy has taken steps to increase India's installed power generation capacity to 500 GW by 2030 using non-fossil fuels.
A study of the Western approach to climate change calls for developing countries to devise ways to deal with climate change domestically.
0 Comments