Recent Post

6/recent/ticker-posts

யூரோ 2024 தொடர் - ஸ்பெயின் சாம்பியன் பட்டம் / Euro 2024 Series - Spain Champions

யூரோ 2024 தொடர் - ஸ்பெயின் சாம்பியன் பட்டம் / Euro 2024 Series - Spain Champions

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனையடுத்து இரண்டாம் பாதி தொடங்கிய உடனே, 47வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் முதல் கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்த நிலையில், ஸ்பெயின் எளிதில் வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கோல் பால்மர் அபாரமாக கோல் அடித்து ஸ்கோரை சமன் செய்தார். 

இதனால் கடந்த முறை போல் இம்முறையும் போட்டி சமனில் முடிந்து, பெனால்டி முறையில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது ஸ்பெயின் அணியில் சப்ஸ்டியூட் வீரராக களத்திற்கு வந்த மைக்கேல் ஓயர்சபால் 86வது நிமிடத்தில் ஒருகோல் அடித்தார்.

ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் இங்கிலாந்து அணி கடுமையாக முயற்சித்தும் கோல் அடிக்க முடியாததால், ஸ்பெயின் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நான்காவது முறையாக யூரோ கோப்பையை ஸ்பெயின் அணி கைப்பற்றியது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel