Recent Post

6/recent/ticker-posts

உலகளாவிய இந்தியா செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2024 / Global India Artificial Intelligence Summit 2024

உலகளாவிய இந்தியா செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2024
Global India Artificial Intelligence Summit 2024

உலகளாவிய இந்தியா செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2024 / Global India Artificial Intelligence Summit 2024

TAMIL

உலகளாவிய இந்தியா செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2024 / Global India Artificial Intelligence Summit 2024: உலகளாவிய இந்தியா செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு ஜூலை 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. சர்வதேச பிரதிநிதிகள், செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் உச்சி மாநாட்டை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடத்த உள்ளது. உலக அளவில் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை இந்த உச்சிமாநாடு வெளிப்படுத்தும்.  

உலகளாவிய இந்தியா செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைக்கிறார். 

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம், தொழில்துறை இணை அமைச்சர் திரு ஜிதின் பிரசாத் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.

செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மையில் இந்தியாவின் தலைமைப் பாத்திரத்தின் பின்னணியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உச்சிமாநாடு, செயற்கை நுண்ணறிவு வழங்கும் பன்முக சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்வதில் புதிய வரையறைகளை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

கணினித்திறன், அடித்தள மாதிரிகள், தரவுத்தொகுப்புகள், பயன்பாட்டு மேம்பாடு, எதிர்காலத் திறன்கள், தொடக்க நிதி, பாதுகாப்பான மற்றும் நம்பகமான செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் கருப்பொருளில் கவனம் செலுத்தும் இந்த நிகழ்வு, முழு செயற்கை நுண்ணறிவு குறித்த விரிவான விவாதங்களை உறுதி செய்கிறது.

ENGLISH

Global India Artificial Intelligence Summit 2024: The Global India Artificial Intelligence Summit will be held on July 3 and 4. The Ministry of Electronics and Information Technology is going to host the summit which will be attended by international delegates, artificial intelligence experts and policy makers. The summit will demonstrate commitment to responsible development of artificial intelligence globally.

The Global India Artificial Intelligence Summit will be inaugurated by the Union Minister of Electronics and Information Technology, Railways and Information and Broadcasting Mr. Ashwini Vaishnav.

Minister of State for Electronics and Information Technology, Commerce and Industry Mr. Jitin Prasad will attend the inauguration ceremony.

Organized against the backdrop of India's leadership role in the Global Partnership for Artificial Intelligence, the summit aims to set new benchmarks in addressing the multifaceted challenges and opportunities offered by Artificial Intelligence.

Focusing on the themes of computing, foundational models, datasets, application development, future capabilities, startup funding, secure and reliable artificial intelligence, the event ensures comprehensive discussions on the entire artificial intelligence.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel