கடந்த 2003-ம் ஆண்டு முதல்மத்திய அரசு சார்பில் தேசிய மின் ஆளுமை விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு 2024-ம் ஆண்டுக்கான விருது உத்தர பிரதேசத்தின் வாரணாசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கத்துக்கு அளிக்கப்பட உள்ளது. இந்த மாவட்டம், பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியில் அமைந்துள்ளது.
தேசிய மின் ஆளுமை விருதுக்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அமைச்சகங்கள், மத்திய இணை அமைச்சகங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய, மாநில அரசுகளின் நிறுவனங்கள், மாவட்டங்கள், உள்ளாட்சி நிர்வாகங்கள், தனியார் கல்வி, ஆய்வு நிறுவனங்கள் விண்ணப்பிக்கின்றன.
இந்த ஆண்டு வாராணசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம், தேசிய மின் ஆளுமை விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
0 Comments