மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்றுப் போட்டியில் மனுபார்க்கர் 3 ஆவது இடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்தார். 8 வீராங்கனைகள் பங்கேற்ற இறுதிச் சுற்றிலும், இலக்கை குறிவைத்து சுட்ட அவர், 221.7 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான பதக்க கணக்கையும் அவர் தொடக்கி வைத்தார்.
ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் 22 வயதான மனு பாக்கர் படைத்தார். மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை தென் கொரிய வீராங்கனைகள் வென்றனர்.
0 Comments