இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியும், இடதுசாரி தொழிலாளர் கட்சியும் போட்டியிட்டன.
இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கையில் தொழிலாளர் கட்சி 408 இடங்களிலும், கன்சர்வேட்டிவ் கட்சி 136 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஆட்சியமைக்க 326 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில் 408 இடங்களில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சி பிரிட்டனில் ஆட்சியமைக்க உள்ளது.
14 ஆண்டுகள் கழித்து இடதுசாரி கட்சி பிரிட்டனில் ஆட்சியமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இடதுசாரி தொழிலாளர் கட்சியின் சார்பில் கெயர் ஸ்டேமர் அடுத்த பிரதமராக பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments