5000 கிமீ தூரம் வரையில் இலக்கை துல்லியமாக நிர்ணயித்து தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையானது நேற்று (ஜூலை 24) ஒடிசா மாநிலம் சந்திப்பூர் LC-IV மூலம் மாலை 4.20 மணிக்கு ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. நீண்ட தூரம் செயல்படும் சென்சார்கள், குறைந்த நேரத்தில் தொடர்புகொள்ளும் அளவுக்கு கம்யூனிகேஷன் சிஸ்டம், வேறு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் ஆகிய வசதிகளை கொண்ட முழுமையான நெட்வொர்க்-மையப்படுத்தப்பட்ட போர் ஆயுதமாக உள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் பாலிஸ்டிக் ஏவுகணை பற்றி தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணையை நிலத்திலும், நீரிலும் நிலைநிறுத்தி இலக்குகளை தாக்க முடியும்.
0 Comments