புதிய தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்தியத் தொலைத்தொடர்புத் துறைக்கு உட்பட்ட முன்னணி தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமேட்டிக்ஸ் வளர்ச்சி மையம் (சி-டாட்), ‘செல் இல்லாத’ 6-ஜி அணுகு மையங்களை உருவாக்குவதற்காக, இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) ரூர்க்கி மற்றும் மாண்டியுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இவ்விரு ஐஐடி-க்களும் இணைந்து இந்தப் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க உள்ளன.
இந்த ஒப்பந்தம், மத்தியத் தொலைத்தொடர்புத் துறையின், தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி நிதியத்தின் கீழ், கையெழுத்தாகியுள்ளது. இந்த நிதியம், உள்நாட்டு தொழில் நிறுவனங்கள், இந்திய புத்தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், தொழில்நுட்ப வடிவமைப்பு, உருவாக்கம், தொலைத்தொடர்பு சாதனங்களை வணிகமயமாக்குவதற்கான ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
0 Comments