வடகிழக்கு மாநிலங்களில் கிராமப்புற போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அசாம் மாநிலத்திற்கு ரூ.378.68 கோடி செலவில், பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 563.67 கிலோமீட்டர் நீளமுள்ள 78 சாலைகள், 14 பாலங்களை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் சமூக-பொருளாதார நிலை மேம்படுவதோடு, தொலைதூர கிராமங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடையிலான இடைவெளி குறையும்.
0 Comments