இந்தியாவிலிருந்து புராதானப் பொருட்கள், அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுக்க வகை செய்யும் ஒப்பந்தத்தில், இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன.
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 46-வது உலக பாரம்பரிய குழுவின் கூட்டத்திற்கு இடையே, இன்று (26.07.2024) இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில், மத்திய கலாச்சாரத்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திரு எரிக் கேர்செட்டி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
யுனெஸ்கோவின் 1970-ம் ஆண்டு உடன்படிக்கைக்கு ஏற்ப, கலாச்சார உடைமைகள் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
0 Comments