விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியுடன் (28 வயது, 7வது ரேங்க்) நேற்று மோதிய பார்போரா (28 வயது, 32வது ரேங்க்) 6-2, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் 1 மணி, 56 நிமிடம் போராடி வென்றார்.
இது அவர் வென்ற 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். முன்னதாக, 2021ல் பிரெஞ்ச் ஓபனில் பார்போரா கோப்பையை கைப்பற்றி இருந்தார். ஜாஸ்மின், பார்போரா இருவரும் விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் முதல் முறையாக பைனலுக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments