விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகள் நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் 3ம் கட்ட அகழாய்வு பணி கடந்த 18-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக கண்ணாடி மணிகள், கல்மணிகள் மற்றும் பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி, கிபி 16ம் நூற்றாண்டு நாயக்கர் கால செப்பு காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று (ஜூலை 6) உடைந்த நிலையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட காளை உருவ பொம்மை, சுடுமண் காதணி, அலங்கரிக்கப்பட்ட சுடுமண் மணி ஆகிய தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
0 Comments