Recent Post

6/recent/ticker-posts

நிதி ஆயோக் குழுவில் மாற்றம் / Change in Niti Aayog Committee

நிதி ஆயோக் குழுவில் மாற்றம் / Change in Niti Aayog Committee

நிதி ஆயோக் என்பது இந்தியாவில் செயல்பட்ட திட்டக்குழுவுக்கு மாற்றாக கடந்த 2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு. இதன் தலைவராக பிரதமர் செயல்பட்டு வருகிறார். மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி அரசு கடந்த மாதம் பதவியேற்றது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் நிதி ஆயோக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைவராகவும், பொருளாதார நிபுணர் சுமன் கே பெரி தொடர்ந்து நிதி ஆயோக்கின் துணைத் தலைவராகவும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானி வி.கே.சரஸ்வத், விவசாயப் பொருளாதார நிபுணர் ரமேஷ் சந்த், குழந்தை நல மருத்துவர் வி.கே.பால் மற்றும் மேக்ரோ பொருளாதார நிபுணர் அரவிந்த் விர்மானி ஆகியோரும் அரசாங்க சிந்தனைக் குழுவின் முழுநேர உறுப்பினர்களாகத் தொடர்வார்கள். 

பிவிஆர் சுப்ரமணியம் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், நரேந்திர சிங் தோமருக்குப் பதிலாக, நிதி ஆயோக் அதிகாரப்பூர்வ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மற்ற அதிகாரப்பூர்வ உறுப்பினர்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜேபி நட்டா, எச்.டி.குமாரசாமி, ஜிதன் மஞ்சி ராம், லாலன் சிங் வீரேந்திர குமார், ஜுவல் ஓரம், அன்னபூர்ணா தேவி, சிராக் பஸ்வான், கிஞ்சிரப்பு ராம் மோகன் நாயுடு, ராவ் இந்தர்ஜித் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக சிறப்பு அழைப்பாளர்களாக இருந்த மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இந்த முறை பட்டியலில் இல்லை. முன்னதாக நிதின் கட்கரி, வீரேந்திர குமார் மற்றும் ராவ் இந்தர்ஜித் சிங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இருந்தனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel