கடந்த ஜூன்-21 ம் தேதி தொடங்கிய இந்த கோப்பா அமெரிக்கா தொடரின் இறுதி போட்டியானது இன்று (ஜூலை-15) புளோரிடாவில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியும், கொலம்பியா அணியும் மோதியது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் கடுமையாக முயற்சி செய்தும் நிர்ணயித்த 90'நிமிடங்களில் ஒரு கோலை கூட அடிக்க முடியாமல் திணறினார்கள்.
112வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் வீரரான லாட்டாரோ மார்டினெஸ் மிரட்டலான கோலை அடித்தார். இதனால் அர்ஜென்டினா அணி ஆட்ட நேர முடிவில் திரில்லாக 1-0 என கொலம்பியாவை வீழ்த்தி இறுதி போட்டியை வெற்றி பெற்று சாம்பியனானது.
இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு கோப்பா அமெரிக்கா தொடர் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற கோப்பா அமெரிக்கா தொடரில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த வெற்றியின் மூலம் 16-வது முறையாக கோப்பா அமெரிக்கா தொடரை கைப்பற்றி அசத்தி இருக்கிறது அர்ஜென்டினா.
0 Comments