‘ஒரு அணுசக்தித் துறை ஒரு ஆய்விதழ்’ என்ற திட்டம் மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனையில் இன்று தொடங்கப்பட்டது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதற்கும், படிப்பதற்கும் ஒரே குடையின் கீழ், அணுசக்தித் துறையின் அனைத்து அலகுகள்/ துணை அலகுகளை ஒருங்கிணைப்பது இந்தத் திட்டத்தின் தனித்துவமாகும்.
இந்த முன்முயற்சி காரணமாக டிஜிட்டல் முறையிலும், கூட்டாகவும் ஆதார வளங்களைப் பகிர்ந்துகொள்வது சாத்தியமாகும். இதற்காக வைலி இந்தியா பிரைவேட் லிமிட்டெட், ஸ்பிரிங்கர் நேச்சர் குரூப் ஆகியவற்றுடன் அணுசக்தித் துறை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
0 Comments