கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மருங்கூர் ஏரிக்கரை பகுதியில், ஜூன் 18ம் தேதி முதல் அகழாய்வு துவங்கி நடந்து வருகிறது. அகழாய்வு இயக்குனர் சிவானந்தம் தலைமையில் அகழாய்வு பொறுப்பாளர்கள் பாக்கியலட்சுமி, சுபலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அகழாய்வில் முதலில் ராசராசன் கால செம்பு காசு, சுடுமண்ணால் ஆன வட்ட சில்லுகள் கண்டெடுக்கப்பட்டன.தற்போது பச்சை நிறத்திலான கண்ணாடி மணி ஒன்று கிடைத்துள்ளது. உருளை வடிவலான இக்கண்ணாடி மணி 12.5 மி.மீ., நீளம், 8 மி.மீ., விட்டம் 0.45 கிராம் எடை கொண்டது.
0 Comments