கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வு கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது.
இந்த அகழாய்வில் ஏற்கெனவே கண்ணாடி பாசி மணிகள், தா எனும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.
இந்த நிலையில், திங்கள்கிழமை மீன் உருவிலான சிவப்பு வண்ண பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த இரு ஓடுகளின் நீளம், அகலம் முறையே 4.5 செ.மீ., 4.3 செ.மீ.
0 Comments