“நீடித்த வாழ்வாதாரத்திற்கு பாரம்பரிய அறிவு” என்பது குறித்த முதலாவது அறிவியல், தொழில்நுட்ப, புதிய கண்டுபிடிப்பு மாநாடு இன்று (29.07.2024) புதுதில்லியில் தொடங்கியது.
யுனெஸ்கோ ஆதரவுடன் வளரும் நாடுகளுக்கான சர்வதேச அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு மையமும், அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலும் (சிஎஸ்ஐஆர்) இணைந்து இந்த 3 நாள் மாநாட்டை நடத்துகின்றன.
சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என் கலைசெல்வி இந்த மாநாட்டை தொடங்கிவைத்தார். ஐதராபாதில் உள்ள சிஎஸ்ஐஆர் இயக்குநர் டாக்டர் டி.சீனிவாச ரெட்டி, புதுதில்லியில் உள்ள யுனெஸ்கோ இயற்கை அறிவியல் நிபுணர் டாக்டர் பென்னோ போயர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
பெங்களூரூவில் உள்ள பலவகை துறைகளுக்கான பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், துணைவேந்தருமான பேராசிரியர் ஆனந்த் தர்ஷன் சங்கர் முக்கிய உரையாற்றினார்.
0 Comments