கடல்சார் பாரம்பரியத்திற்கு இணங்க, கோவா ஆளுநர் திரு பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை முன்னிலையில், அதர்வ வேதத்திலிருந்து பிரார்த்தனைக்கு திருமதி ரீட்டா ஸ்ரீதரனால் கப்பல் இயக்கி வைக்கப்பட்டது.
இந்திய கடற்படையின் வெல்ல முடியாத உணர்வையும், தொலைதூர மற்றும் ஆழமான தாக்கும் திறனையும் பிரதிபலிக்கும் வலிமைமிக்க அம்பின் நினைவாக இந்த கப்பலுக்கு திரிபுட் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இரண்டு திரிபுட் நவீன போர்க்கப்பல்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகம், கோவா ஷிப்யார்ட் நிறுவனத்திற்கு இடையே 2019 ஜனவரி 25 அன்று கையெழுத்தானது.
இந்தக் கப்பல் எதிரிகளின் மேற்பரப்பு கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானம் தாங்கி கப்பல்களுக்கு எதிரான போர் நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
திரிபுட் வகை கப்பல்கள் 124.8 மீ நீளமும் 15.2 மீ அகலமும் கொண்டவை. அவற்றின் இடப்பெயர்ச்சி தோராயமாக 3600 டன் ஆகும். வேகம் அதிகபட்சமாக 28 கடல் மைல்கள்.
இந்தக் கப்பல்களில் மேம்பட்ட ரகசிய அம்சங்கள், நவீன ஆயுதங்கள், சென்சார்கள், இயங்குதள மேலாண்மை அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
கோவாவில் கட்டப்படும் திரிபுட் வகை கப்பல்கள் ரஷ்யாவிலிருந்து பெறப்பட்ட டெக் மற்றும் தல்வார் வகை கப்பல்களை மாதிரியாக கொண்டுள்ளன. இந்தப் போர்க்கப்பல்கள் முதன்முறையாக இந்திய கப்பல் கட்டும் தளத்தால் உள்நாட்டிலேயே கட்டப்படுகின்றன.
0 Comments