ஆனந்த் திருமணச் சட்டத்தின் கீழ் சீக்கியர்களின் திருமணங்களை அமல்படுத்துவது, பதிவு செய்வது குறித்து விவாதிக்க தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் தலைமையில் 18 மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுடன் காணொலி கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.
ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மேகாலயா உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன. மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இரண்டு மாத காலத்திற்குள் இந்த சட்டத்தை அமல்படுத்துவதாக உறுதியளித்துள்ளன.
0 Comments