இந்தியாவின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது.
இந்த ஆணையத்தின் தலைவராக இருந்த மனோஜ் சோனி பதவி வகித்து வந்தார். சமீபத்தில் நடந்த தேர்வில் சர்ச்சை எழுந்த நிலையில் கடந்த 20ம் தேதி அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவை இன்று ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, புதிய தலைவராக பிரீத்தி சுதன் என்பவரை நியமித்து உள்ளார். முன்னாள் சுகாதாரத் துறை செயலராக பணிபுரிந்த ப்ரீத்தி சுதன். இவர் தற்போது யுபிஎஸ்சி உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
0 Comments