Recent Post

6/recent/ticker-posts

ஊழியர்கள் குறித்த யுவர் டோஸ்ட் தகவல் அறிக்கை / REPORT ON EMPLOYEE BY YOUR TOAST

ஊழியர்கள் குறித்த யுவர் டோஸ்ட் தகவல் அறிக்கை
REPORT ON EMPLOYEE BY YOUR TOAST

ஊழியர்கள் குறித்த யுவர் டோஸ்ட் தகவல் அறிக்கை / REPORT ON EMPLOYEE BY YOUR TOAST

TAMIL

இந்தியாவின் முன்னணி மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கிய நிறுவனங்களில் ஒன்றான `யுவர் டோஸ்ட்’ நடத்திய ஆய்வில் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் ஊடகம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் பணிபுரியும் ஐந்தில் மூன்று ஊழியர்கள் தீவிர மன அழுத்தத்தை அனுபவிப்பதாக கூறியுள்ளது. ’

அதுமட்டுமின்றி, ஆண்களைவிட பெண்கள்தான் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். 21 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் மிக அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும், அதற்கு அடுத்ததாக 30 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் என்றும், பின்னர் 41 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, போக்குவரத்துத் துறை, ஆட்சேர்ப்பு, ஊடகம், நிதி மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் 5,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, அவர்களிடையே தீர்ப்பு பயம், பணிச்சுமை, வாழ்க்கையில் சமநிலை இல்லாதது மற்றும் பணியில் குறைவான அங்கீகாரம் ஆகியவை முக்கியமாகக் கூறப்படுகிறது.

பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய ஆய்வில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களில் 31% அதிகரிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்களில் சுமார் 53.6% பேரும், பெண்களில் 72.2% பேரும் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகப் புகாரளித்துள்ளனர். பெண்களில் பலரும் வேலை நிறுவனங்களில் பணிச்சுமை மற்றும் வீட்டில் உள்ள பணிச்சுமை இருப்பதால் அதிகளவில் மன அழுத்தமடைந்துள்ளனர்.

ENGLISH

A survey conducted by YourToast, one of India's leading mental and emotional health companies, found that three out of five employees in key sectors including technology, information technology, manufacturing and media experience severe stress. '

In addition, women report more stress than men. The survey revealed that people between the ages of 21 and 30 are most stressed, followed by the 30 to 40 age group and then the 41 to 50 age group.

According to a survey of more than 5,000 employees working in various sectors including technology, information technology, manufacturing, transportation, recruitment, media, finance and education, fear of judgement, workload, lack of work-life balance and lack of recognition at work were cited as key among them.

A study conducted in collaboration with various organizations found a 31% increase in employees suffering from severe stress compared to last year.

About 53.6% of males and 72.2% of females reported being under a lot of stress. Many of the women are increasingly stressed due to work load in work organizations and work load at home.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel