ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.
இந்த பரிந்துரையை ஏற்று இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக D. கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருந்த இரு இடங்களும் நிரப்பப்பட்டுவிட்ட நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.
0 Comments