Recent Post

6/recent/ticker-posts

தேசிய அதிகார வரம்பைத் தாண்டி பல்லுயிர் பெருக்கம் தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves India's signing of Biodiversity Convention beyond National Jurisdiction

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய அதிகார வரம்பைத் தாண்டி பல்லுயிர் பெருக்கம் தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவு தேசிய அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் கடல் உயிரியல் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமையும்.

பெரும்பாலும் 'உயர் கடல்கள்' என்று குறிப்பிடப்படும் பகுதிகள், தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் உள்ள உலகளாவிய பொதுவான பெருங்கடல்கள் ஆகும். 

அவை கப்பல் போக்குவரத்து, வான்வழிப் பயணம், நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்கள் மற்றும் குழாய்கள் அமைப்பது போன்ற சட்டப்பூர்வமான சர்வதேச நோக்கங்களுக்காக அனைவருக்கும் உரிமை உள்ளவையாக உள்ளன. இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் புவி அறிவியல் அமைச்சகம் தலைமை வகிக்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel