Recent Post

6/recent/ticker-posts

பீகார் மாநிலம் பித்தாவில் ரூ 1413 கோடி மதிப்பீட்டில் புதிய சிவில் வளாகம் உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet has approved the construction of a new civil complex at Pitta, Bihar at an estimated cost of Rs 1413 crore

பீகார் மாநிலம் பித்தாவில் ரூ 1413 கோடி மதிப்பீட்டில் புதிய சிவில் வளாகம் உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet has approved the construction of a new civil complex at Pitta, Bihar at an estimated cost of Rs 1413 crore

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பித்தாவில் 1,413 கோடி ரூபாய் மதிப்பீட்டுச் செலவில் புதிய சிவில் பகுதி வளாகம் அமைப்பதற்கான இந்திய விமான நிலைய ஆணையத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த உள்கட்டமைப்புத் திட்டம் பாட்னா விமான நிலையத்தின் எதிர்பார்க்கப்படும் திறனை நிவர்த்தி செய்வதற்கான ஒரு உத்திசார் நடவடிக்கையைப் பிரதிபலிக்கிறது.

பாட்னா விமான நிலையத்தில் புதிய முனைய கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணியில் இந்திய விமானநிலைய ஆணையம் ஏற்கனவே ஈடுபட்டுள்ள நிலையில், குறைந்த அளவு நிலம் கிடைப்பதால் மேலும் விரிவாக்கம் தடைபடுகிறது.

பித்தா விமான நிலையத்தில் முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் 66,000 சதுர மீட்டர் பரப்பளவில் 3000 உச்ச நேர பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்கிறது.

தேவைப்படும் போது மேலும் 50 லட்சம் பயணிகள் பயணிக்க இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இறுதித் திறன் ஆண்டொன்றுக்கு ஒரு கோடி பயணிகள் பயணிக்கும் வகையில் அமையும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel