இந்திய கடற்படை 17 நீர்மூழ்கி கப்பல்களை வைத்திருக்கிறது. இவற்றில் 16 நீர்மூழ்கி கப்பல்கள் டீசல் மற்றும் மின்சாரத்தின் மூலம் இயங்குகின்றன.
இவற்றில் ஆறு கப்பல்கள் ரஷ்யாவின் கிலோ வகையைச் சேர்ந்தவை. நான்கு கப்பல்கள் ஜெர்மனியின் எச்.டி.டபிள் ரகத்தைச் சேர்ந்தவை. இன்னொரு ஆறு கப்பல்கள் பிரான்சின் ஸ்கார் பீன் ரகத்தைச் சேர்ந்தவை.
அணுசக்தியில் இயங்கும் ஒரே நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். அரிஹந்த் 2018ஆம் ஆண்டு இந்தியக் கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 83 மெகாவாட் திறன் கொண்ட அணு உலையை உள்ளடக்கிய இந்தக் கப்பலில் இருந்து அணு ஏவுகணைகளை ஏவ முடியும்.
அதேபோன்ற இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். அரிகாட் விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டது. 6,000 டன் எடை கொண்ட இந்தக் கப்பல் 750 கி.மீ. தூரம் வரை உள்ள இலக்கைத் தாக்கும் கே-15 ஏவுகணையைக் கொண்டிருக்கிறது.
இந்தக் கப்பலின் பரிசோதனைகள் முடிவடைந்தை அடுத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐஎன்எஸ் அரிகாட் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
0 Comments