தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் - மைசூரு, சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, கோவை - பெங்களூரு என மொத்தம் 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது மேலும் கூடுதலாக, சென்னை எழும்பூர்-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு கண்டோன்மன்ட் மார்க்கத்தில் 2 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் - 31ம் தேதி) காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
ரயில்களுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.இந்த ரயில்கள் செப்டம்பர் 2ம் தேதி முதல் வழக்கமான சேவையைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments