கனிம வளங்களுக்கு மாநில அரசுகள் வரி விதிப்பது தொடர்பான வழக்குகளில் 1989-ம் ஆண்டு, 2004-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை அளித்திருந்தது.
ஆனால் இந்த இரு தீர்ப்புகளும் முரண்பட்டதாக இருந்தன. 1989-ம் ஆண்டு இந்தியா சிமெண்ட்ஸ் vs தமிழ்நாடு வழக்கில் மத்திய அரசு தரும் ராயல்டியும் வரியின் கீழ் வரும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆனால் 2004-ம் ஆண்டு மேற்கு வங்க அரசு vs கேசோராம் இண்டஸ்ட்ரீஸ் வழக்கில் ராயல்டி ஒரு வரி என 1989-ல் உச்சநீதிமன்றம் தவறாக குறிப்பிட்டுவிட்டது. ராயல்டி மீதான செஸ்வரி என திருத்தம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதனிடையே கனிம வளங்களுக்கு வரி, ராயல்டி வசூலிக்க உரிமை இல்லை என கோரி உச்சநீதிமன்றத்தில் கனிம வள சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்த நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.
2011-ல் இதனை விசாரிக்க 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கனிம வளங்கள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை உண்டு.
கனிம வளங்களுக்காக மத்திய அரசிடம் இருந்து மாநிலங்கள் பெறுகிற ராயல்டி தொகையை வரியாக கருத முடியாது; கனிம வளம் உள்ள நிலத்தின் மீதான வரி விதிக்கும் உரிமை மாநில அரசுக்குதான் உண்டு.
நிலம் என குறிப்பிட்டாலே கனிம வளம் உள்ள நிலத்தையும் சேர்த்துதான் குறிக்கும் என 9 நீதிபதிகளில் 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பளித்தனர். இதற்கு மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மத்திய அரசு தரப்பு வாதத்தை நிராகரித்து, கனிம வளங்களுக்கு சுரங்க குத்தகைதாரர்கள் மற்றும் மத்திய அரசிடம் இருந்து 2005-ம் ஆண்டு ஏப்ரல் முதல் வரி மற்றும் ராயல்டி தொகையை மாநில அரசுகள் பெற்றுக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
0 Comments