2024 ஜூலை மாதத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (2012=100 என்ற அடிப்படையில்) சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பணவீக்க விகிதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது கடந்த 59 மாதங்களில் மிகவும் குறைவானதாகும்.
அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதம் 2024 ஜூலை மாதத்தில் 3.54% (தற்காலிகமானது) ஆகும். அதனுடன் தொடர்புடைய பணவீக்க விகிதம் கிராமப்புறங்களில் 4.10% ஆகும். நகர்ப்புறங்களில் இது 2.98% ஆகும்.
2024 ஜூலை மாதத்திற்கான உணவுப் பணவீக்கம் 2023 ஜூன் மாதத்திற்குப் பின் மிகவும் குறைவானதாக இருந்தது. அகில இந்திய நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதம் 2024 ஜூலை மாதத்தில் 5.42% (தற்காலிகமானது) ஆகும். கிராமப்புறங்களில் பணவீக்க விகிதம் 5.89% ஆகவும், நகர்ப்புறங்களில் பணவீக்க விகிதம் 4.63% ஆகவும் இருந்தது.
2024 ஜூலை மாதத்தில் அனைத்து பிரிவுகளுக்கும் பணவீக்கம் குறைந்துள்ளது. காய்கறிகள், பழங்கள், மசாலாப் பொருட்கள் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 1114 நகர்ப்புற சந்தைகள், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 1181 கிராமங்களில் இருந்து விலைத் தரவுகள் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் களச் செயல்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த களப் பணியாளர்களின் வாராந்தர கணக்கெடுப்பு மூலம் சேகரிக்கப்படுகின்றன.
2024 ஜூலை மாதத்தில், தேசிய புள்ளியியல் அலுவலகம் 100% கிராமங்கள், 98.5% நகர்ப்புற சந்தைகளில் இருந்து விலை விவரங்களை திரட்டியது. அதே நேரத்தில் சந்தை வாரியான விலை விவரங்கள் கிராமப்புறங்களுக்கு 88.71% ஆகவும், நகர்ப்புறங்களுக்கு 92.64% ஆகவும் இருந்தன.
0 Comments