தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் அலுவலகம், நாட்டின் 88 தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் உள்ள 317 சந்தைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட சில்லறை விலைகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை தொகுத்து வருகிறது. அதன்படி 2024 ஜூன் மாதத்திற்கான குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.
2024, ஜூன் மாதத்திற்கான அகில இந்திய தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக்குறியீடு 1.5 புள்ளி அதிகரித்து 141.4 புள்ளிகளாக இருந்தது.
2024 ஜூன் மாதத்திற்கான ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 3.67 சதவீதமாக உள்ளது. இது 2023, ஜூன் மாதத்தில் 5.57 சதவீதமாக இருந்தது
2024, ஜூன் மாதத்தில் உணவு மற்றும் பானங்கள் 148.7, பாக்கு, புகையிலை 161.6, துணி மற்றும் காலணி 144.2, வீட்டு வசதி 128.4, எரிபொருள், விளக்கு 148.8, பல்வகை பொருட்கள் 136.3 என மொத்தம் 141.4 புள்ளிகள் அகில இந்திய தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக்குறியீடாக இருந்தது.
0 Comments