குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் கீழ் ஆணின் சராசரி திருமண வயது 21 ஆகவும், பெண்ணின் சராசரி திருமண வயது 18ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இதனை மாற்றும் வகையில் கடந்த 2021ம் ஆண்டு ஆண்களுக்கு நிகராக பெண்களுடைய திருமண வயதை 21ஆக உயர்த்த ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. சில தரப்பு எதிர்ப்புகளால் இன்னும் அது அமல்படுத்தப்படாமல் உள்ளது.
இந்த சூழலில் இமாச்சலப் பிரதேச அரசு பெண்களின் சராசரி திருமண வயதையும் 21ஆக அதிகரிக்கும் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
பாலிய சமத்துவத்தை உறுதி செய்யவும், ஆண்களுக்கு நிகராக பெண்களும் கல்வி, தொழில் உள்ளிட்டவற்றில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக திருமண வயதை உயர்த்தியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
0 Comments