Recent Post

6/recent/ticker-posts

234 நகரங்களில் புதிதாக தனியார் பண்பலை வானொலி அலைவரிசைகளைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves launch of new private radio channels in 234 cities

234 நகரங்களில் புதிதாக தனியார் பண்பலை வானொலி அலைவரிசைகளைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves launch of new private radio channels in 234 cities

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தனியார் பண்பலை வானொலி மூன்றாம் கட்ட ஏலத்தின் கீழ் ரூ.784.87 கோடி மதிப்பில் 234 புதிய நகரங்களில் 730 அலைவரிசைகளுக்கான 3-வது தொகுதி மின்னணு ஏலத்தை நடத்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) நீங்கலாக மொத்த வருவாயில் பண்பலை அலைவரிசைகளுக்கான வருடாந்திர உரிமக் கட்டணம் (ஏஎல்எஃப்) 4% ஆக வசூலிக்கும் முன்மொழிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது 234 புதிய நகரங்களுக்கும் பொருந்தும்.

இந்த 234 நகரங்களில் இதுவரை தனியார் பண்பலை வானொலி அலைவரிசைகள் தொடங்கப்படவில்லை. தற்போது இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதன் மூலம், இந்த நகரங்களில் பண்பலை வானொலிக்கான ஒலிபரப்புத் தேவை பூர்த்தி செய்யப்படும். மேலும் தாய்மொழியில் உள்ளூர் உள்ளடக்கத்தையும் இவை ஒலிபரப்பும்.

28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 234 நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் 730 அலைவரிசைகளைத் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 11 நகரங்களில் தலா 3 அலைவரிசைகளுக்கான ஏலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel