பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (24.08.2024) கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், உயிரி தொழில்நுட்பத் துறையின் உயர் செயல்திறன் உயிரி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான 'பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரி இ3 கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பயோ இ3 (BioE3) எனப்படும் உயிரி் இ3 கொள்கையின் முக்கிய அம்சங்களில் ஆராய்ச்சி - மேம்பாடு, தொழில்முனைவோருக்கான புதுமை ஆகியவை அடங்கும்.
இது உயிரி உற்பத்தி, உயிரி செயற்கை நுண்ணறிவு மையங்கள், உயிரி பவுண்டரி ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம் தொழில்நுட்ப மேம்பாட்டையும் வணிகமயமாக்கலையும் துரிதப்படுத்தும்.
பசுமை வளர்ச்சியை மீட்டுருவாக்கம் செய்யும் உயிரி பொருளாதார மாதிரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், இந்த கொள்கை இந்தியாவின் திறமையான தொழிலாளர் சக்தியை விரிவுபடுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்.
0 Comments