Recent Post

6/recent/ticker-posts

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார் / Minister Udhayanidhi inaugurated the Formula 4 car race

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார் / Minister Udhayanidhi inaugurated the Formula 4 car race

சென்னை தீவுத்திடல் பகுதியில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். எஃப்ஐஏ முதற்கட்ட அனுமதி கொடுத்த நிலையில் கார் பந்தயத்தின் பயிற்சி போட்டிகள் தொடங்கின. பயிற்சி போட்டிகள் இரவு 10.45 மணி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி), ரேசிங் புரோமோஷன் நிறுவனம் (ஆா்பிபிஎல்) சாா்பில் பாா்முலா 4 காா் இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகிய பந்தயங்கள் நடைபெறுகிறது.

3.7 கி.மீ. தொலைவு கொண்ட சென்னை பாா்முலா 4 காா் பந்தய சா்க்யூட், தீவுத்திடலில் தொடங்கி, போா் நினைவுச் சின்னம், நேப்பியா் பாலம் , சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை ஆகியவற்றின் வழியே மீண்டும் தீவுத்திடலை அடைவதுடன் நிறைவடைகிறது.

ஐ.ஆா். எல். என்று அழைக்கப்படும் இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் 6 அணிகள் உள்ளன. இதுவும் 5 சுற்றுகளை கொண்டது. போட்டி நடைபெறவுள்ள சாலைப் பகுதிகள் அனைத்திலும் உயரமான மின்னொளிகள், பாா்வையாளா்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel