திரிபுராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசின் பங்காக 40 கோடி ரூபாயை முன்கூட்டியே வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் 11 குழுக்கள், ராணுவத்தின் 3 குழுக்கள், விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்கள் ஏற்கனவே மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் மாநில அரசுக்கு உதவி வருகின்றன.
0 Comments