Recent Post

6/recent/ticker-posts

மேற்குத் தொடர்ச்சி மலையின் 56,800 சதுர கி.மீ சூழலியல் பாதுகாப்பு பகுதி - மத்திய அரசு அறிக்கை / 56,800 sq km Ecological Conservation Area of ​​Western Ghats - Central Government Report

மேற்குத் தொடர்ச்சி மலையின் 56,800 சதுர கி.மீ சூழலியல் பாதுகாப்பு பகுதி - மத்திய அரசு அறிக்கை / 56,800 sq km Ecological Conservation Area of ​​Western Ghats - Central Government Report

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 340-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், கேரளாவில் 9,994 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நிலப்பகுதியை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பாணை கடந்த ஜூலை 31 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

வயநாடு நிலச்சரிவு நடந்த அடுத்த நாள் வெளியிடப்பட்டுள்ளதோடு அதன்மீது மேற்குத் தொடர்ச்சி மலைகள் உள்ள தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்கள் அடுத்த 60 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிக்கையில் குஜராத்தின் 449 சதுர கிலோமீட்டர், மகாராஷ்டிராவில் 17,340 சதுர கிலோமீட்டர், கோவாவின் 1,461 சதுர கிலோ மீட்டர், கர்நாடகாவின் 20,668 சதுர கீலோமீட்டர், தமிழ்நாட்டின் 6,914 சதுர கிலோமீட்டர், கேரளாவின் 9,993.7 சதுர கிலோ மீட்டர் என மொத்தம் 56,800 சதுர கி.மீ பரப்பளவிலான பகுதிகள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel