நம் நாட்டின் நீதித்துறையின் உச்சபட்ச அதிகாரம் பெற்றதாக உச்சநீதிமன்றம் உள்ளது. இந்த உச்சநீதிமன்றம் கடந்த 1950ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. முதலில் இந்த உச்சநீதிமன்றம் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் தான் செயல்பட்டு வந்தது.
பழைய நாடாளுமன்ற கட்டத்தில் 8 ஆண்டுகள் வரை உச்சநீதிமன்றம் செயல்பட்டது. அதன்பிறகு தான் தற்போதைய இடத்துக்கு உச்சநீதிமன்றம் மாறுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் தான் உச்சநீதிமன்றம் உருவாகி 75 ஆண்டு நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் 75 ரூபாய் மதிப்பிலான நினைவு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது.
இதையடுத்து அனைத்து மாநிங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள் பங்கேற்கும் வகையில் 2 நாள் தேசிய மாநாடு என்பது டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்தது.
இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் மாநாடு, உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்கள், அனைவருக்கும் உள்ளடக்கிய நீதிமன்ற அறைகள், நீதித்துறை பாதுகாப்பு மற்றும் நீதித்துறை நல்வாழ்வு, வழக்கு மேலாண்மை மற்றும் நீதித்துறை பயிற்சி போன்ற மாவட்ட நீதித்துறை தொடர்பான பிரச்சினைகளை விவாதிப்பதற்கான ஐந்து பணி அமர்வுகளை நடத்துகிறது.
இந்த விழாவில் உச்சநீதிமன்றம் உருவாகி 75 ஆண்டு நிறைவு பெற்றதை குறிக்கும் வகையிலான ரூ.75 மதிப்பிலான நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்த விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட், பிற உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
0 Comments