Recent Post

6/recent/ticker-posts

நோக்கியா, மைக்ரோசிப் உள்பட 8 நிறுவனங்கள் தொழில் தொடங்க தமிழக அரசு ஒப்பந்தம் / 8 companies including Nokia, Microchip have signed an agreement with the Tamil Nadu government to start business

நோக்கியா, மைக்ரோசிப் உள்பட 8 நிறுவனங்கள் தொழில் தொடங்க தமிழக அரசு ஒப்பந்தம் / 8 companies including Nokia, Microchip have signed an agreement with the Tamil Nadu government to start business

அமெரிக்காவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இவற்றின் மூலம் தமிழ்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி வசதிகளை இந்த நிறுவனங்கள் மேம்படுத்தும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கும் எட்டப்படும்.

ரூ. 450 கோடி முதலீட்டில் நோக்கியா நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 பேருக்கு வேலைவாய்ப்புகளும், யீல்ட் என்ஜினீயரிங் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கோயம்புத்தூரில் ரூ. 150 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் உற்பத்தித் தொழிற்சாலையும் 300 பேருக்கு வேலைவாய்ப்புகளும், சென்னையில் கீக்மைண்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் 500 வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel