Recent Post

6/recent/ticker-posts

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக தேசிய அளவிலான குழுவை நியமனம் - உச்சநீதிமன்றம் உத்தரவு / Appointment of National Level Committee on Ensuring Safety of Doctors and Nurses - Supreme Court Order

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக தேசிய அளவிலான குழுவை நியமனம் - உச்சநீதிமன்றம் உத்தரவு / Appointment of National Level Committee on Ensuring Safety of Doctors and Nurses - Supreme Court Order

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. 

அப்போது பல்வேறு கருத்துக்களை முன்வைத்த நீதிபதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 10 மருத்துவர்கள் கொண்ட தேசிய அளவில் ஒரு குழுவை அமைப்பதாகவும், அவர்கள் நாடு முழுவதும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பரிந்துரைப்பார்கள் என்று தெரிவித்தனர். 

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு தொடர்பாக தேசிய அளவில் ஒருமித்த கருத்து உருவாக்க குழுவை நியமித்த நீதிபதிகள், அக்குழுவின் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களின் பட்டியலையும் வெளியிட்டனர். 

அதன்படி, இந்திய அரசின் அமைச்சரவை செயலாளர், இந்திய அரசின் உள்துறை செயலாளர், மத்திய சுகாதார அமைச்சக செயலாளர், தேசிய மருத்துவ ஆணைய தலைவர், தேசிய தேர்வாளர்கள் குழு தலைவர் ஆகியோர் இக்குழுவின் அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் ஆவர்.

அத்துடன் இவர்கள் தவிர, அறுவை சிகிச்சை நிபுணர் வைஸ் அட்மிரல் ஆர்.சரின், டாக்டர் எம்.ஸ்ரீனிவாஸ், டாக்டர் டி .நாகேஷ்வர் ரெட்டி, டாக்டர் பிரதிமா மூர்த்தி, டாக்டர் கோவர்தன் தத் பூரி, டாக்டர் சௌமித்ரா ராவத், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இதய சிகிச்சை பிரிவு தலைவர் பேராசிரியை அனிதா சக்சேனா, மும்பை கிராண்ட் மருத்துவ கல்லூரி தலைவர் பேராசிரியர் பல்லவி சப்ரே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நரம்பியல் துறை தலைவர் டாக்டர் பத்மா ஸ்ரீவஸ்தவா ஆகியோரும் இக்குழுவின் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel