இன்று (17.08.2024) அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை காணொலி காட்சி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களைச் சோ்ந்த 1,045 குளம், குட்டைகளில் நீா் நிரப்பி அதன் மூலமாக நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்கும், விவசாயம், குடிநீா் உள்ளிட்ட தேவைகளுக்காகவும் தொடங்கப்பட்ட திட்டம் தான் அத்திக்கடவு-அவிநாசி திட்டம்.
இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி 2016ம் ஆண்டு அவிநாசியில் பலரும் தொடா் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஆய்வுப் பணிகளுக்கான ஆரம்ப கட்ட நிதியாக ரூ. 3.27 கோடியை ஒதுக்கீடு செய்து, அதனைத் தொடர்ந்து அரசாணையும் வெளியிட்டாா்.
அதன் பின்னரும் திட்டம் வேகமெடுக்காத நிலையில், அவிநாசியில் 2017ம் ஆண்டு, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஒரு நாள் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடா்ந்து 2018ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இன்றைக்கு ரூ. 1,916.41 கோடி நிதியில் இந்தத் திட்டம் முழுமை அடைந்துள்ளது.
0 Comments