இட ஒதுக்கீடு தொடர்பான மாணவர் போராட்டம் உக்கிரமடைந்த சூழலில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
ஷேக் ஹசினா மற்றும் அவரது தங்கை ஷேக் ரிஹானா ஆகியோர் பிரதமர் இல்லத்தில் இருந்து பாதுகாப்பான இடம் நோக்கி சென்றுவிட்டனர்.
ஷேக் ஹசினா வெளியேற்றத்திற்கு பின்னர் ராணுவ தளபதி ஆற்றிய உரையில், போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனவும் ராணுவ தளபதி உறுதியளித்தார்.
எனவே, போராட்டத்தை கைவிட்டு அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும் எனவும் ராணுவ தளபதி கோரிக்கை வைத்துள்ளார்.
வங்கதேசத்தில் இடைக்கால ஆட்சி அமைய ராணுவம் துணை நிற்கும் எனவும் ராணுவ தளபதி பேசியிருக்கிறார். மேலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இடைக்கால அரசு அமைத்து நாட்டை நடத்துவோம் எனவும் தெரிவித்தார்.
0 Comments